கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான SARCOMEX-25 பயிற்சியானது வெற்றிகரமாக முடிவடைந்தது

“கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்” SARCOMEX-25 பயிற்சி 2025 மார்ச் 11 ஆம் திகதி அன்று கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சென்னை (MRCC Chennai) மற்றும் இலங்கை கொழும்பு (MRCC Colombo) கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் அவசரகாலங்களில் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்துடன் நடாத்தப்பட்டது.

இந்த பயிற்சியில், இலங்கை தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களில் நீர் கசிவு ஏற்பட்டாலும், இந்திய தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இலங்கைக் கொடி ஏற்றிய கப்பலில் இருந்து ஒருவர் கடலில் தவறி விழுதல் போன்ற அனர்த்த சந்தர்பங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், துல்லியமான செய்திகளை பரிமாற்றிக் கொள்ளல், நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, சென்னை மற்றும் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களின் செயல்பாட்டுத் திறனை மதிப்பிடுவதற்கு இந்த பயிற்சியானது திட்டமிடப்பட்டிருந்தது.

இத்தகைய பயிற்சிகள் மூலம் சென்னை மற்றும் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களில் எதிர்கால கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு, இயங்குதன்மையும் மற்றும் புதிய அறிவு மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மிகவும் திறனுடையதாகவும் பயனுடையதாகவும் நாடாத்துவதற்கு உதவும்.