அமெரிக்க பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தனர்
அமெரிக்க பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தின் (Institute for Security Governance –ISG) பிரதிநிதிகள் சிலர், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் 2025 மார்ச் 11 அன்று உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தனர்.
அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தினால் இலங்கை முப்படைகள் மற்றும் அதனுடன் இணைந்த பாதுகாப்பு கல்வி நிறுவனங்களின் (Institutional Capacity Building - ICB) தனித்துவமான திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இதன்படி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் கடற்படையின் தகவல் இணைவு மையத்தை (Information Fusion Centre - IFC) மேம்படுத்துதல், கடல்சார் வலயங்களில் இலங்கை கடற்படையின் விழிப்புணர்வை அதிகரிக்க தேவையான திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பல துறைகளில் திறன் மேம்பாடு தொடர்பாக கடற்படைத் தளபதி மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நிர்வாகத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
மேலும், இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.