நிகவெரட்டிய கடகமுவ, நீர்த்தேக்கத்தில் உள்ள மதகினை சீர்செய்வதற்கு கடற்படையின் சுழியோடி பங்களிப்பு

செயலற்ற நிலையில் இருந்த நிகவெரட்டிய கடகமுவ நீர்த்தேக்கத்தின் வான் மதகைச் சரிசெய்து அதனை மீண்டும் செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்காக 2025 மார்ச் 10 ஆம் திகதி சுழியோடி ஆதரவினை வழங்க கடற்படையினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கமைவாக, நிகவெரட்டிய கடகமுவ நீர்த்தேக்கத்தின் மதகில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, மதகினை உடனடியாக சீர்செய்யுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளின்படி கடற்படையினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, வடமேற்கு கடற்படை கட்டளையின் சுழியோடக் குழுவினர் வான்கதவை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். இக்குழுவினர் மதகு கதவிலுள்ள குறைபாட்டை உன்னிப்பாக சரிசெய்து, நீர்ப்பாசனத் துறையினரின் ஆதரவுடன் மதகு கதவில் சிக்கிய மணல், கற்கள், சேறுகளை அகற்றினர்.

மேலும், நிகவெரட்டிய கடகமுவ நீர்த்தேக்கத்தின் மதகுகளை கடற்படையின் உதவியுடன் சீர்செய்ததன் பின்னர், 100 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு பாசன நீரை திறம்பட விடுவிக்க இதன் மூலம் முடியுமாகும்.