கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட LINE THROWING ADAPTER என்ற கருவியை செயல்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டனர்
இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் (Research and Development Unit - RDU) மூலம் T 56 தயாரிக்கப்பட்ட Line Throwing Adapter கருவியை 2025 மார்ச் 04 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் இலங்கை கடற்படைக் கப்பல்களான சயூர மற்றும் சக்தி ஆகிய கப்பல்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் படி, கொடி அதிகாரி கடற்படை ஏவுதல் கட்டளையின் கருத்துப்படி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் (RDU) இனால் இந்த Line Throwing Adapter கருவி தயாரிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதன் மூலம், கடலில் இரண்டு கப்பல்களுக்கு இடையே பொருட்களை பரிமாறிக்கொள்வது, ஆபத்தில் இருக்கும் கப்பலை இழுப்பது போன்ற கடல்சார் நடவடிக்கைகளின் மூலம் கப்பல்களுக்கு இடையேயான கயிறு பரிமாற்றத்தை மிகவும் பாதுகாப்பாகவும் திறமையாகவும் மேற்கொள்ள முடியும். கடற்படையின் தற்போதைய வளங்கள் இந்தப் புதிய தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், கடற்படையினரும் இதற்கான செலவினங்களை பெருமளவு சேமிக்க முடிகிறது.
மேலும், கடற்படையின் தொழில்நுட்ப அறிவு மற்றும் வளங்களை சிறந்த நிர்வாகத்துடன் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய கண்டுபிடிப்புகள் மூலம் கடற்படையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க பெரும் உதவியாக