ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) 02 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்தார்
ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) 2025 மார்ச் 09 இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் (Manual Treadmill) 24 மணிநேரம் தொடர்ந்து நடந்து இரண்டு (02) உலக கின்னஸ் சாதனைகளைப் படைப்பதற்கு தகுதி பெற்றார்.
அதன்படி, இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் 12 மணி நேரத்தில் 94.30 கி.மீ வேகமாகவும் நடந்து, இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் 12 மணி நேரத்தில் 68.04 கிமீ தூரம் கடந்து நிறுவப்பட்டிருந்த முந்தைய உலக கின்னஸ் சாதனையை முறியடித்து மற்றும் இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் 24 மணி நேரத்தில் 174.08 கி.மீ தூரம் வேகமாக நடந்ததால் இவ்வாறு இரண்டு (02) உலக கின்னஸ் சாதனைகளை ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) படைப்பதற்கு தகுதி பெற்றார்.
மேலும், 02 உலக கின்னஸ் சாதனைகளுடன், 06 மணி நேரத்தில் 52.56 கி.மீ வேகமான நடைபயண சாதனை, இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் 09 மணி 56 நிமிடம் 16 வினாடிகளில் 50 மைல் வேகமான நடைபயணம் மற்றும் இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் 09 மணி 56 நிமிடங்கள் 16 வினாடிகளில் 50 மைல் வேகத்தில் நடந்து நடைபயண பதிவு மற்றும் இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் 20 மணித்தியாளம் 41 வினாடிகள் 15 நிமிடங்களில் 100 கிலோமீட்டர் தூரம் வேகமாக நடந்து 03 பதிவுகளை வைத்து சாதனை படைப்பதற்கு தகுதி பெற்றதுடன், அந்த சாதனைகள் எதிர்காலத்தில் உலக கின்னஸ் சாதனையாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற கடற்படை சிரேஷ்ட அதிகாரியாக, இலங்கை கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெரும் புகழையும் பெருமையையும் கொண்டு வந்து 02 உலக கின்னஸ் சாதனைகளை நிலை நாட்டுவதற்கு தகுதி பெற்றதால் எந்தவொரு சவாலையும் முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் அடங்காத தைரியம் மூலம் உறுதியுடன் எதிநோக்க முடியும் என்ற இலங்கை இளைஞர் சமூகத்திற்கு மாத்திரமன்றி முழு உலகிற்கும் ஒரு பெறுமதியான முன்மாதிரியை வைக்கும் சந்தர்ப்பமானது 2025 மார்ச் 09 ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகேவுக்கு (ஓய்வு) கிடைத்துள்ளது,
மேலும், இந்த கின்னஸ் உலக சாதனைகளை நிறுவுவதற்கு, கடற்படை தளபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி, உலக சாதனைகளை நிறுவுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அமைப்பான செரண்டிப் உலக சாதனைகள் நிறுவனத்துடன் கடற்படை ஒருங்கிணைந்து, 2025 மார்ச் மாதம் 08 ஆம் திகதி இந்த செயல் ஆரம்பித்த சந்தர்பத்தில் இருந்து ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகேவின் (ஓய்வு) இச் செயல் வெற்றிகரமாக முடிவடையும் வரை தேவையான வசதிகளை வழங்குவதற்கு கடற்படையினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.