சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவானது சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சியை நடாத்தியது
மார்ச் 08 ஆம் திகதி வரும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி அவர்களின் அறிவுறுத்தலின் படி, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி டாக்டர் ருவினி ரசிகா பெரேரா அவர்களின் தலைமையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் பங்கேற்புடன், பெண் அதிகாரிகள், பெண் மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களின் மனைவியர்களுக்கான சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சி இன்று (2025 மார்ச் 8) வெலிசறை கடற்படை வளாகத்தில் உள்ள Wave N’ Lake விழா மண்டபத்தில் நடைபெற்றது.
"அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு: சமத்துவம், உரிமைகள் மற்றும் வலுவூட்டல்" என்பதாகும், என்ற கருப்பொருள் இந்த ஆண்டு (2025) சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருளாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அதே நேரத்தில் ‘நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்’ என்ற முக்கிய கருப்பொருளுடன் 'தேசிய மகளிர் வாரம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடற்படையின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின நிகழ்ச்சியானது கடற்படையின் ரியர் அட்மிரல் தரத்தைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட அதிகாரிகளின் மனைவிகளின் தலைமையில் இசை கலந்த உரை மற்றும் சேவா வனிதா பிரிவின் பெண் மாலுமிகளின் பாடல் கடற்படை கலாச்சார இசைக்குழுவின் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளால் மெழுகூட்டப்பட்டது. மேலும், இந்த மகளிர் தின நிகழ்ச்சியில் ஆயுர்வேத பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் பற்றிய விரிவுரையும், கடற்படை சட்டத் துறையின் தளபதி கமாண்டர் சதுரிகா ஜயமினியினால் பெண்களின் உரிமைகள் மற்றும் சட்ட தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு விரிவுரைகள் அங்கு நடைபெற்றன.
மேலும், சேவா வனிதா மகளிர் தின நிகழ்ச்சியில் சேவா வனிதா பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், குழு உறுப்பினர்கள், கடற்படை தலைமையகம் மற்றும் கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பெண் அதிகாரிகளும் கனிஷ்ட பெண் அதிகாரிகளும் மற்றும் மாலுமிகள், கடற்படை வீரர்களின் மனைவிகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.