“க்லீன் ஶ்ரீ லங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற வேளைதிட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தீவைச் சூழவுள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்துடன் இணைந்து, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கடற்படையின் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு கடற்கரைச் சுத்திகரிப்பு மற்றும் சுற்றுலாத் தலங்களைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகள் 2025 மார்ச் 01 மற்றும் 08 ஆம் திகதிகளில் தெற்கு கடற்படை கட்டளைப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
"ஒரு வளமான நாடு - அழகான வாழ்வு" என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் " க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முக்கிய பங்காளியாக இலங்கை கடற்படை செயற்பட்டு வருகின்றது.
அதன்படி, 2025 மார்ச் 01 மற்றும் 08 ஆம் திகதிகளில், இலங்கை கடற்படைக் கப்பல்களான தக்ஷின, காவன்திஸ்ஸ, நிபுன மற்றும் ருஹுன ஆகிய தென் கடற்படைக் கட்டளைகளின் பங்கேற்புடன், காலி கொடுபவுர தங்குமிடக் கடற்கரை, ஹம்பாந்தோட்டை நகர கடற்கரைப் பூங்கா, கிங்தொட பாலத்திற்கு அருகிலுள்ள கடற்கரை முதல் ரஜ்கம கடற்கரை மற்றும் ரணவிரு ஞாபகார்த்தத்திலிருந்து பள்ளிக்குடா வரையான கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம், "க்லீன் ஶ்ரீ லங்கா" திட்டத்திற்கு கடற்படையின் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வழங்கப்பட்டது.