“க்லீன் ஶ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் கடற்படையினரால் நிலாவெளி கரையோரப் பகுதியில் மங்கூஸ் மரம் நடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது

2025 மார்ச் மாதம் 08 ஆம் திகதி, “க்லீன் ஶ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ், கிழக்கு கடற்படை கட்டளையின் பங்களிப்புடன், நிலாவெளி கரையோரத்தில் மங்கூஸ் மரம் நடும் திட்டத்தை கடற்படையினர் மேற்கொண்டனர்.

இதன்படி "அழகான தீவு - புன்னகைக்கும் மக்கள் " என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், முன்னெடுக்கப்படும் க்லீன் ஶ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மங்கூஸ் மரம் நடும் நிகழ்ச்சியில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி உட்பட கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் குழுவும் கலந்துகொண்டது.