ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) இரண்டு 02 கின்னஸ் உலக சாதனைகளை படைப்பதற்காக நடைபயணத்தைத் ஆரம்பித்தார்
ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) இயந்திரம் அல்லாத டிரெட்மில் இயந்திரத்தில் (Manual Treadmill) 24 மணிநேரம் தொடர்ந்து நடந்து இரண்டு (02) கின்னஸ் உலக சாதனைகளை படைப்பதற்காக இன்று 2025 மார்ச் 08 கடற்படை தலைமையகத்தில் 1500 மணி நேரத்தில், உலக சாதனைகளை அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ நிறுவனமான செரண்டிப் உலக சாதனை நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் நடைப்பயணமானது ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, இதற்கு முன் இயந்திரம் அல்லாத டிரெட்மில் இயந்திரத்தில் 12 மணி நேரத்தில் 68.04 கி.மீ தூரம் நடந்து படைக்கப்பட்ட கின்னஸ் சாதனையை முறியடிக்கவும் 24 மணி நேரத்தில் 160 கி.மீ தூரம் நடந்து இரண்டு (02) புதிய கின்னஸ் சாதனைகளைப் படைப்பதற்காக ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) எதிர்பார்க்கின்றார்.