திக்கோவிட்ட துறைமுகத்தில் கப்பல்களுக்கு பிரவேசித்தல், தேடுதல் மற்றும் கைப்பற்றும் நடைமுறைகள் பற்றிய செயல்விளக்கப் பயிற்சியானது இடம்பெற்றது

கடற்படையின் சிறப்புக் கப்பல் படையினால் Indian Ocean Rim Academic Group (IORAG) மற்றும் United Nations Office on Drugs and Crime (UNODC) ஆகியவற்றின் உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கப்பல்களுக்கு பிரவேசித்தல், தேடுதல் மற்றும் கைப்பற்றும் முறைகள் தொடர்பான செயல்விளக்கப் பயிற்சியானது 2025 மார்ச் 05 அன்று திக்கோவிட்ட துறைமுக வளாகத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், Colonel Amanda Johnston Indian Ocean Rim Academic Group (IORAG), United Nations Office on Drugs and Crime (UNODC) மற்றும் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு உட்பட அதிகாரிகள் குழு இந்த செயல்விளக்கப் பயிற்சியை கண்காணிப்பதில் பங்கேற்றனர்.