இந்திய கடற்படைக் கப்பல் ‘INS KUTHAR’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டு புறப்பட்டது
2025 மார்ச் 03 அன்று ‘INS KUTHAR’ தனது உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய கடற்படையின் ‘INS KUTHAR’ போர்க்கப்பலானது, இன்று (2025 மார்ச் 03) தீவை விட்டு வெளியேறுகிறது. மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறையில் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
மேலும், ‘INS KUTHAR’ என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் மற்றும் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே நட்புறவு மற்றும் பயிற்சி பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்றனர்.
அதன்படி, கடற்படையின் சிறப்புக் கப்பல் படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பல்களுக்கு நுழைவது, சோதனை செய்வது மற்றும் கைது செய்யும் முறைகள் தொடர்பான பயிற்சிப் பயிற்சியிலும், 'INS KUTHAR' கப்பலினால் நடாத்தப்பட்ட யோகா நிகழ்ச்சியிலும் இரு நாட்டு கடற்படை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், பிராந்திய கடற்படையினருடன் பரிமாறிக்கொள்ளப்படும் புதிய அறிவு, திறன்கள் மற்றும் அனுபவங்கள் மூலம் அபிவிருத்தி செய்யப்படும் ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளினால் இந்து சமுத்திர வலயத்தின் புதிய போக்குகள் மற்றும் சவால்களுக்கு வெற்றிகரமாக ஒன்றிணைந்து பதிலளிப்பது தொடர்பாக இலங்கை கடற்படைக்கு இது பெரும் ஆதரவாக இருக்கும்.