இலங்கை கடற்படையினால் காலி கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு பயிற்சி மாதிரியொன்று வழங்கி வைக்கப்பட்டது

இலங்கை கடல்சார் பல்கலைக்கழகத்தின் காலி பிரதேச மையத்தில் கல்வி கற்கும் பட்டதாரி வேட்பாளர்களின் கல்விக்காக Yamaha 40 HP வெளிப்புற எரிப்பு இயந்திரத்தின் வெட்டு மாதிரியை கையளித்தல் 2025 மார்ச் 04 அன்று தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

கடல்சார் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு நீண்டகால தேவையாக இருந்த இந்த பயிற்சி மாதிரியை வழங்கியதன் மூலம் பட்டதாரிகளின் கல்விற்காக ஆற்றிய பங்களிப்பை பாராட்டிய காலி கடல்சார் பல்கலைக்கழகத்தின் வலய பணிப்பாளர் திருமதி ஐ.எஸ்.சமரசேகர அவர்கள் கடற்படையினை பாராட்டினார்.