கடற்படையின் தொழிநுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் குருநாகல் நக்வத்தாகம கனிஷ்ட கல்லூரியில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், Sunshine Foundation for Good மற்றும் Sunshine Holdings Pvt. Ltd. நிறுவனத்தின் நிதிப் பங்களிப்போடு, குருனாகல் மாவட்ட நக்வத்தாகம கனிஷ்ட கல்லூரியில் நிறுவப்பட்ட 1086வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 மார்ச் 04 அன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு சுமார் 10000 லீற்றர் நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது, இதன் மூலம் நக்வத்தாகம கனிஷ்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்களின் சுத்தமான குடிநீர் தேவையை இலகுவாக பூர்த்தி செய்ய முடியும்.