பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் 'PNS ASLAT' உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 'PNS ASLAT' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (2025 மார்ச் 05) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
இவ்வாறாக, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'PNS ASLAT' என்ற போர்க்கப்பல் 123 மீற்றர் நீளமும், மொத்தம் 243 நிர்வாகக் குழுவினரையும் கொண்டதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் MUHAMMAD AZHAR AKRAM பணியாற்றுகின்றார்.
மேலும், 'PNS ASLAT' என்ற கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் நிர்வாகக் குழுவினர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளனர்.
மேலும், உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்த பின்னர், 'PNS ASLAT' என்ற கப்பல் 2025 மார்ச் 06 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட உள்ளதுடன், அங்கு மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் கடற்படை பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.