சீப்புக்குளம், தம்மென்னா வேலுசுமண மகா வித்தியாலயத்தை கற்றலுக்கு உகந்த வளாகமாக திருத்துவதற்கு கடற்படையின் சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் சீப்புக்குளம், தம்மென்னா வேலுசுமண மகா வித்தியாலயத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 03 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க, உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட சமூக பணி திட்டங்களுக்கு கடற்படை தொடர்ந்து பங்களித்து வருகிறது.

இதன்படி "அழகான தீவு - புன்னகைக்கும் மக்கள் " என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கையை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ஆன்மீக ரீதியாக மாற்றும் "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தில் இலங்கை கடற்படை ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை கடற்படை செயற்படுவதுடன், குறித்த தேசிய திட்டத்திற்கு இணங்க, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேன்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

இதன்படி, சீப்புக்குளம், தம்மென்னா வேலுசுமண மகா வித்தியாலயத்தின் மாணவர்களின் எதிர்கால கல்விக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கும் வகையில், வளாகத்தை சுத்தப்படுத்தி தேவையான திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்காக வடக்கு கடற்படை கட்டளை தளபதியின் மேற்பார்வையின் கீழ் சமூக பராமரிப்பு பங்களிப்பு வழங்கப்பட்டது…