கடற்படையினால் வணக்கத்திற்குரிய பிக்குகளுக்காக விசேட நடமாடும் பல் மருத்துவ சிகிச்சையானது வெற்றிகரமாக நடாத்தப்பட்டது
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக, இலங்கை அமரபுர மகா சங்க சபையுடன் இணைந்து வணக்கத்துக்குரிய பிக்குகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நடமாடும் பல் வைத்திய சிகிச்சையானது 2025 பெப்ரவரி 28 அன்று பன்னிப்பிட்டிய ஸ்ரீ தேவ்ரம் மகா விகாரையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
இதன்படி, இலங்கை கடற்படையின் பல் மருத்துவ பிரிவு மற்றும் மேற்கு கடற்படை கட்டளை பல் மருத்துவ குழுவின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட நடமாடும் பல் மருத்துவ சிகிச்சையினால், சிகிச்சைக்கு வந்த வணக்கத்திற்குரிய பிக்குகளுக்கு இலவச பல் பரிசோதனை மற்றும் முறையான வாய் சுகாதார நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்ட பல வகையிலான பல் மருத்துவ சேவைகளை வழங்கும் வாய்ப்பு கடற்படையினருக்கு கிடைத்த்து.