கச்சத்தீவு வருடாந்த திருவிழாவைக் கொண்டாடுவதற்காக இலங்கை கடற்படையானது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றது

யாழ் குடாநாட்டின் கச்சத்தீவில் அமைந்துள்ள, வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெரும் வருடாந்த திருவிழாவானது 2025 மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் நடாத்துவதற்கு யாழ் மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியானது தற்போது இலங்கை கடற்படையினரின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.

அதன்படி, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில், புனித அந்தோனியார் தேவாலயத்தின் தேவாலயத்தில் நடைபெரும் வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தற்காலிக கப்பல் நிலையங் அமைத்தல், குடிநீருக்கான நீர் அமைப்புகளை அமைத்தல், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் மற்றும் தற்காலிக பாதைகள் நிறுவுவதுடன் மின்சார வசதிகளை நிறுவுதல் ஆகியவை இந்த நாட்களில் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக உயிர்காக்கும் குழுக்கள் தேவைப்படும் இடங்களை அடையாளம் காணல் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கவும் கடற்படையின் தற்காலிக மருத்துவமனை ஒன்றையும் நிர்மாணித்து வருவதுடன், கடற்படையினரின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்பு மற்றும் தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் வீதிகளை சுத்தப்படுத்தும் பணிகளையும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் உட்பட ஏனைய அனைத்து குருமார்கள் மற்றும் அதிகாரிகள், பல்வேறு பொருட்களும் காங்கேசன்துறை மற்றும் குறிகாட்டுவானில் இருந்து கச்சத்தீவுக்கு வரை பாதுகாப்பான கடல் போக்குவரத்து கடற்படையின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.