கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் வெஹெரயாய கனிஷ்ட பாடசாலையில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ மற்றும் கலாநிதி பெரகும் ஓவிடிகல அவர்களினதும் பங்களிப்புடன், மொனராகலை கல்வி வலயத்தின் வெஹெரயாய பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெஹெரயாய கனிஷ்ட பாடசாலையில் நிறுவப்பட்ட 1085 ஆவது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு சுமார் 10000 லீட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதுடன், இதன் மூலம் வெஹெரயாய கனிஷ்ட பாடசாலையில் மாணவர்களினது மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களினது சுத்தமான குடிநீர் தேவையை இலகுவாக பூர்த்தி செய்ய முடியுமானதாகும்.