நிகழ்வு-செய்தி

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் பங்களிப்புடன் வாஹல்கட D2 கல்லூரி புனரமைக்கப்பட்டது

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அனுராதபுர மாவட்டத்தில் உள்ள வாஹல்கட D2 கல்லூரியை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் கடற்படையின் சமூக நல பங்களிப்புடன் இன்று (2025 பெப்ரவரி 22) இடம்பெற்றது.

22 Feb 2025

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் பண்டுவஸ்நுவர ஹல்மில்லவெவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், குருநாகல் மாவட்டத்தில் பண்டுவஸ்நுவர மேற்கு பிராந்திய மத்திய பேரம்பொல ஹல்மில்லவெவ கிராமத்தில் நிறுவப்பட்ட 1081வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

22 Feb 2025

தொடக்க தகவமைப்பு பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 12 அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்றது

தொடக்க தகவமைப்பு பாடநெறி (மருத்துவம்) 03/2024, வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு (12) அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2025 பெப்ரவரி 22) கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.

22 Feb 2025