256 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 367 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 256 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் இருநூற்று பத்தொன்பது (219) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நூற்று நாற்பத்து எட்டு (148) பயிற்சி மாலுமிகள் உட்பட மொத்தம் முந்நூற்று அறுபத்தேழு (367) பயிற்சி மாலுமிகள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2025 பெப்ரவரி 11 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
அதன்படி, 256 வது ஆட்சேர்ப்பின் நிரந்தர பிரிவில் இருநூற்றிரண்டு (202) கடற்படை வீரர்கள், நிரந்தர பிரிவில் பதினேழு (17) பெண் கடற்படை வீராங்கனைகள், தன்னார்வ பிரிவில் எழுபத்தைந்து (75) கடற்படை வீரர்கள் மற்றும் தன்னார்வ பிரிவில் எழுபத்து மூன்று (73) பெண் கடற்படை வீராங்கனைகளுல் சிறந்த கடற்படை வீரருக்கான வெற்றிக்கிண்ணம் கடற்படை வீரர் பி.ஏ.எல் குணவர்தன பெற்றுள்ளதுடன் அனைத்து பாடங்களிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற கடற்படை வீரருக்கான வெற்றிக்கிண்ணம் பெண் கடற்படை வீராங்கனை டபிள்யூ.எல்.எஸ். மதுஷானி பெற்றுள்ளார். சிறந்த விளையாட்டு வீரருக்கான வெற்றிக்கிண்ணத்தை கடற்படை வீரர் பி.எச்.ஏ.எஸ்.வீரசூரிய மற்றும் சிறந்த வீராங்கனைக்கான வெற்றிக்கிண்ணத்தை கடற்படை வீரர் ஆர்.எம்.எஸ்.எஸ் ரத்நாயக்கவும் பெற்றுக்கொண்டனர். சிறந்த துப்பக்கியாளருக்கான வெற்றிக்கிண்ணம் கடற்படை வீரர் ஜி.ஜே.டி.ஆர் ஜயலத் பெற்றுள்ளார். இதேவேளை, 256 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக 'விஜயபா' பிரிவு தெரிவு செய்யப்பட்டது.
இங்கு வெளியேறிச் செல்லும் கடற்படை வீரர்களுக்கு உரையாற்றிய ரியர் அட்மிரல் துஷார உடுகம முதலில் புதிய கடற்படை வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தாய்நாட்டை பாதுகாக்கும் உன்னத குறிக்கோளுடன் இலங்கை கடற்படையில் இணைந்த புதிய மாலுமிகள், கடினமான ஆரம்ப பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, பணிவான, ஒழுக்கம், சவால்களை எதிர்கொள்ளும் வலிமையான கடற்படை வீர்ர்கள் எதிர்காலத்தில் தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாத்து, இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படையின் வளர்ச்சிக்காக, தேசிய அபிவிருத்திச் செயற்பாட்டில் பிரதான பங்குதாரர்களாக இருப்பதன்
இங்கு வெளியேறிச் செல்லும் கடற்படை வீரர்களுக்கு உரையாற்றிய ரியர் அட்மிரல் துஷார உடுகம முதலில் புதிய கடற்படை வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தாய்நாட்டை பாதுகாக்கும் உன்னத குறிக்கோளுடன் இலங்கை கடற்படையில் இணைந்த புதிய மாலுமிகள், கடினமான ஆரம்ப பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, பணிவான, ஒழுக்கம், சவால்களை எதிர்கொள்ளும் வலிமையான கடற்படை வீர்ர்கள் எதிர்காலத்தில் தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாத்து, இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படையின் வளர்ச்சிக்காக, தேசிய அபிவிருத்திச் செயற்பாட்டில் பிரதான பங்குதாரர்களாக இருப்பதன் பொறுப்பை உணர்ந்து, திறமையான, ஒழுக்கமான மற்றும் அசைக்க முடியாத கடற்படை வீர்ர்களாக தாய்நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு அனைத்து பயிற்சி கடற்படை வீர்ர்களும் உறுதியாக இருக்க வேண்டும் என ரியர் அட்மிரல் துஷார உடுகம தெரிவித்தார். பரந்தளவிலான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குப் பங்காற்றுவதற்குப் தங்களின் அன்புக்குரிய மகன்கள் மற்றும் மகள்களை கடற்படைக்கு நன்கொடையாக அளித்து அவர்களை ஊக்கப்படுத்திய கடற்படை வீர்ர்களின் பெற்றோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், பயிற்சி கடற்படையினர்களின் பயிற்சி நிகழ்ச்சி, கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார குழுவின் நிகழ்ச்சி, அங்கம் ஹரப நிகழ்ச்சி ஆகிய வண்ணமயமான காட்சிகளுடன் சூரியன் அஸ்தமிக்கும் சம்பிரதாயத்துடன் இந் நிகழ்வு நிறைவடைந்த்து.
மேலும், இந்த அணிவகுப்புக்காக, இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ராஜப்பிரிய சேரசிங்க, தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப், தென் கடற்படை கட்டளையின் சிரேஷ்ட, இளநிலை கடற்படை அதிகாரிகள், கலைக்கப்பட்ட பயிற்சி கடற்படையினர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டர்.