ருவண்டா பாதுகாப்பு சேவை ஆணை மற்றும் நிர்வாக கல்லூரியின் அதிகாரிகள் குழு ஒரு ஆய்வு சுற்றுப்பயணத்திற்காக கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
2025 பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையில் ஆய்வு விஜயத்திற்காக ருவண்டா பாதுகாப்பு சேவை ஆணை மற்றும் நிர்வாக கல்லூரியின், நிர்வாக பாடநெறியைப் படிக்கும் பதினைந்து (15) மாணவர் உத்தியோகத்தர்கள் மற்றும் நான்கு (04) கல்விப் பணியாளர்களை உள்ளடக்கிய கர்னல் LAUSANNE NSENGIMANA INGABIRE தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2025 பெப்ரவரி 11) ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர், அங்கு கர்னல் LAUSANNE NSENGIMANA INGABIRE மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியை சந்தித்தனர்.
இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவைச் கடற்படை தலைமையகத்தில் சந்தித்த அதிகாரிகள் குழு சிநேகபூர்வ சந்திப்பை மேற்கொண்டதுடன், அதனைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுப் பரிமாற்றமும் இடம்பெற்றது.
மேலும், இலங்கை கடற்படையின் பங்கு குறித்து கடற்படைத் தளபதி வழங்கிய விரிவுரையில் ருவண்டா பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டதுடன், கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.