கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளையின் அதிகாரியாக ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா பொறுப்பேற்றார்

கடற்படை கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளையின் அதிகாரியாக, ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா இன்று (2025 பெப்ரவரி 10) திருகோணமலை கடற்படை தளத்தில், கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளை அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன்படி, கடற்படையின் மரபுப்படி கடற்படை ஏவுகணை கட்டளைக்கு ரியர் அட்மிரல் இந்திக டி சில்வாவை வரவேற்ற பின்னர், கடற்படை ஏவுகணை கட்டளையின் கொடி அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சஞ்சீவ பெரேராவினால் ரியர் அட்மிரல் இந்திக டி சில்வாவிடம் அந்த பதவிக்கான கடமைகளை கையளித்தார்.