"அமான் - 2025" பலதரப்பு பயிற்சி ஆரம்பமாகிறது

பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு பயிற்சியான AMAN-2025 இன் தொடக்க விழா இன்று (2025 பெப்ரவரி 07) பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள கடற்படைத் துறைமுக வளாகத்தில் நடைபெற்றதுடன், இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகு கப்பலின் தளபதி மற்றும் ஏனைய கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

அதன்படி, இன்று (2025 பெப்ரவரி 07) முதல் பெப்ரவரி 11 வரை பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெறும் இந்த ஒன்பதாவது (AMAN - 2025) பலதரப்பு பயிற்சியின் தொடக்க விழாவிற்கு இலங்கை உட்பட 60 பிராந்திய மற்றும் பிராந்திய சாராத நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படைத் தலைவர்கள், கடல்சார் துறையில் கல்வியாளர்கள் மற்றும் கடல்சார் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.