இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான ‘ANTONIO MARCEGLIA’ வெற்றிகரமான கூட்டு கடற்படை பயிற்சியின் பின் புறப்பட்டது

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 05 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இத்தாலிய கடற்படையின் 'ANTONIO MARCEGLIA' என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இலங்கை கடற்படை கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2025 பெப்ரவரி 07) இலங்கையை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை முறைப்படி கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்

இந்த கூட்டு கடற்படை பயிற்சியில் கப்பல்கள் வடிவங்களில் நகர்வது, கப்பல்களுக்கு இடையே செய்தி பரிமாற்றம், கப்பல்களுக்கு இடையே வணக்கம் செலுத்துதல் போன்ற கடற்படை பயிற்சிகளில் ஈடுபட்ட பின்னர் இவ் பயிற்சி முடிவிற்கு வந்தது.

இக் கப்பல் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், கப்பலின் கட்டளை தளபதி கமாண்டர் ALBERTO BARTOLOMEO மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா ஆகியோருக்கு இடையில் கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதுடன், கப்பலின் அங்கத்தவர்கள் கொழும்பு மற்றும் காலி பிரதேசங்களில் உள்ள கவர்ச்சிகரமான இ’டங்களை பார்வையிட சென்றனர்.

மேலும்,வெளிநாட்டு கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய நட்புரீதியான பயணங்களின் மூலம் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நட்புறவும் ஒத்துழைப்பும் மேலோங்கும், மேலும் இந்த விஜயங்களுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் புதிய அறிவு, திறன்கள் மற்றும் அனுபவங்கள் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பொதுவான கடல்சார் சவால்களை கூட்டாக வெற்றிப்பெற இலங்கை கடற்படையினரால் முடியும்.