க்லீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பேர ஏரியை மறுசீரமைப்பதற்கு கடற்படையின் பங்களிப்பு
"வளமான நாடு - அழகான வாழ்வு" என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள க்லீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் ஏற்பாட்டில் பேர ஏரியை மாற்றுவதற்கான பூர்வாங்க செயற்திட்டம் இன்று (2025 பெப்ரவரி 06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக கடற்படை படகுகள் மற்றும் உழைப்பையும் வழங்க கடற்படை ஏற்பாடு செய்தது.
அதன்படி, இரண்டு நாட்களாக பேர ஏரியை சுத்தப்படுத்தும் திட்டத்தில் இரானுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம், பேர ஏரியின் உயிரியல் பன்முகத்தன்மையைக் காப்பாற்றவும், அதன் அழகை அதிகரிக்கவும், கழிவுகளை முறையாக அகற்றுவதன் மூலம் சுற்றுலாவின் ஈர்பு தன்மையை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தேசிய பணிகளில் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவமான பங்களிப்பை வழங்க இலங்கை கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.