பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட AMAN-2025 பல்முக பயிற்சியில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படையின் பிரதிநிதியாக, இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு இன்று (2025 ஜனவரி 30) கொழும்பு துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு இன்று புறப்பட்டது. கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு புறப்பட்டது.