அரச இலங்கை கடற்படையில் கடமையாற்றி மறைந்த அருளானந்தம் மரியம்பிள்ளை அவர்களின் பூதவுடல் யாழ்ப்பாணம் கைட்ஸ் தீவில் பூரண கடற்படை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
அரச இலங்கை கடற்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட மாலுமியான அருளானந்தம் மரியம்பிள்ளை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி காலமானார், மேலும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி யாழ்ப்பாணம் கைட்ஸ் தீவில் கடற்படையின் மரியாதையுடன் அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
சிரேஷ்ட மாலுமியான அருளானந்தம் மாரியம்பிள்ளை 1954 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி அரச இலங்கை கடற்படையில் இணைந்தார். 22 வருட கடற்படை சேவைக்குப் பிறகு 1976 டிசம்பர் 29 அன்று கடற்படைப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற அவர் 2024 டிசம்பர் 31 அன்று காலமானார்.
இதன்படி, யாழ்ப்பாணம் கைட்ஸ் தீவில் கடற்படை மரபுகளுக்கமைய சிரேஷ்ட மாலுமியான அருளானந்தம் மாரியம்பிள்ளையின் இறுதிக் கிரியைகள் வடக்கு கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.