கடற்படை தளபதி பிரதி பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்கள் இன்று (2025 ஜனவரி 02) பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில், கௌரவ பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களைச் சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கை கடற்படையின் 26 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை கௌரவ பிரதி பாதுகாப்பு அமைச்சர் வாழ்த்தியதை அடுத்து, கடற்படை தளபதி மற்றும் கௌரவ பிரதியமைச்சர் ஆகியோர் கடல்சார் பாதுகாப்பு, தேசிய பணிகளில் கடற்படையின் பங்களிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், நட்பு ரீதியான கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.
மேலும், கௌரவ பிரதிப் பாதுகாப்பு அமைச்சருடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதி, கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு நினைவுப் பரிசை வழங்கி வைத்தார்.