கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது
சுகாதார அமைச்சின் முயற்சியால், அவுட்ரேவ் ப்ராஜெக்ட்ஸ் கியாரண்டி லிமிடெட் நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில், கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின், சமூகப் பணி செயல்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 1074 மற்றும் 1075 வது இரண்டு (02), (RO) Plants நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவும் சிறப்புத் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டு (02) இடங்களான அலஹெர பிரதேச செயலாளர் பிரிவில், யாய 06, மேல் பகுதி, பெதுமெல கிராமத்திலும், கல்முல்ல, மல்வவாய, பகமூனையிலும் 2024 டிசம்பர் 31 அன்று நிறுவப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தால் அந்த பகுதியில் உள்ள மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும், மேலும் இந்த ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 10000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
மேலும், அவுட்ரேவ் ப்ராஜெக்ட்ஸ் கியாரண்டி லிமிடெட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் திருமதி தியுமி அபேசிங்க மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபையின் உதவி முகாமையாளர் உட்பட பெருமக்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.