புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்தார்

இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட இன்று (2024 டிசம்பர் 31) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டாவை (ஓய்வு பெற்ற) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

அதன்படி, இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை நியமித்தமைக்கு பாதுகாப்புச் செயலாளர் வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, இராணுவ மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில், தேசிய பாதுகாப்பு, கடற்படையின் பணிச்சுமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் இடையே கருத்து பரிமாற்றம் நடந்தது.

மேலும், கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு இடையிலான இந்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பை அடையாளப்படுத்தும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.