கடற்படை வீரர்களின் நலன்கருதி வெலிசர கடற்படை வளாகத்தின் விரிவாக்கப்பட்ட வசதிகள், கடற்படைத் தளபதியின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது
கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக, வெலிசர கடற்படை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஹொக்கி மைதானம், சேவா வனிதா பயன்பாட்டு கட்டிடம் மற்றும் கடற்படை வீர்ர்களின் திருமணமானவர்களின் குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் கடற்படை தளபதியினால் இன்று (2024 டிசம்பர் 30) திறந்து வைக்கப்பட்டது. கடற்படை தளபதி மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி கடற்படையின் பொறியியல் துறையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் கடற்படைத் தளபதி, கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைமையில் கடற்படை வீரர்களின் நலனுக்காக கட்டுமானம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்தன. வெலிசற, இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள ஹொக்கி மைதானத்தின் விளையாட்டு அரங்கம் நிர்மாணிக்கப்பட்டது. மேலும் கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்கருதி, ஒரே கூரையின் கீழ் பல சேவைகளை வழங்கும் நோக்கில், சேவா வனிதாவின் நிதியுதவியுடன் வெலிசற பழைய தையல் நிலையம் அமைந்துள்ள கட்டிடம் அதிக இடவசதியுடன் விரிவுபடுத்தப்பட்டது. அங்கு நலன்புரி கடை, அபான்ஸ் காட்சிறை, சிங்கர் காட்சிறை மற்றும் சேவா வனிதா அழகு கலை நிலையம் என்பன ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.
மேலும், கடற்படைத் தளபதியின் கருத்தின் அடிப்படையில், சேவா வனிதா பிரிவின் நிதிப் பங்களிப்புடன், சிவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் பங்களிப்புடன், வெலிசற கடற்படை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருபத்தி ஒன்று (21) திருமண வீடுகள் திறந்து வைக்கப்பட்டன. கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி அவர்களின் தலைமையில் கடற்படையினரின் திருமண வீடமைப்புப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடற்படையின் பொறியியல் பிரிவு கடற்படையினரின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
மேலும், இந்த கட்டுமானங்கள் மற்றும் வசதிகளை விரைவாக முடிக்க பங்களித்த அனைத்து கடற்படை வீரர்களையும் கடற்படைத் தளபதி கௌரவித்தார், மேலும் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழுவும் பங்கேற்றனர்.