இந்தோனேசியக் கடற்படைக் கப்பல் ‘KRI SULTAN ISKANDAR MUDA-367’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையில் இருந்து புறப்பட்டது

2024 டிசம்பர் மாதம் 28ம் திகதி அன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இலங்கைக்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் SIGMA - CORVETTE ரகக் கப்பலான 'KRI SULTAN ISKANDAR MUDA-367', உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு (2024 டிசம்பர் 30) தீவிலிருந்து புறப்பட்டதுடன், குறித்த கப்பலிற்கு இலங்கை கடற்படையினரால் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் மரபுப்படி கப்பலுக்கு பிரியாவிடையளித்தனர்.

மேலும், கமாண்டர் ANUGERAH ANNURULLAH அவர்கள் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவுடனான உத்தியோகபூர்வ சந்திப்பு மற்றும செயல்பாட்டு பணிப்பாளர் நாயகம் புத்திக லியனகமகே ஆகியோருடனான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று, (2024 டிசம்பர் 30) கடற்படைத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

තවද, மேலும், 'KRI SULTAN ISKANDAR MUDA-367' என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், இலங்கையின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் சென்றது.