'சயுருசர' இதழின் 49வது இதழ் வெளியிடப்பட்டது

கடற்படை ஊடகப் பணிப்பாளர் சபையினால் வெளியிடப்படும் 'சயுருசர' சஞ்சிகையின் 49வது இதழ் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் அதன் பிரதம ஆசிரியர் கமாண்டர் (ஸ்வே) சாலிய சுதுசிங்கவினால் இன்று (2024 டிசம்பர் 30) கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

கடற்படை வீரர்களின் வாசிப்பு மற்றும் எழுதும் திறன்களை மேம்படுத்துதல், அவர்களின் படைப்பாற்றல் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் கடற்படையின் சமூக பணி திட்டங்கள் உள்ளிட்ட சிறப்பு வாய்ப்புகள் குறித்து கடற்படை வீரர்களுக்கு தெரிவிக்கும் நோக்கத்துடன் சயுருசர சஞ்சிகை கடற்படை ஊடக இயக்குநரகத்தால் வெளியிடப்பட்டது.

மேலும், இந்த ஆண்டு இதழில் கடற்படை வீரர்களின் கட்டுரைகள், கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆக்கப்பூர்வமான உரைநடை, கவிதை, ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றின் வளமான தொகுப்பு இடம்பெற்றது.