இலங்கை கடற்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களனி ரஜமஹா விகாரையில் விசேட சமய நிகழ்ச்சி
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் விசேட சமய நிகழ்வு 2024 டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி களனி ரஜமகா விகாரையில் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் மற்றும் கடற்படை சேவை வனிதா பிரிவின் கெளரவத் தலைவர் திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையினருக்கு ஆசிர்வாதம் வழங்கும் வகையில் சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதன் கீழ் பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் இந்து சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சமய நிகழ்ச்சிகளின் தொடரின் கடைசி நிகழ்ச்சியாக, கடற்படை பௌத்த சங்கம் மற்றும் இலங்கை கடற்படை களனி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பௌத்த சமய முறைப்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன்படி கடற்படைத் தளபதியும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவரும், முதலில் களனி ரஜமஹா விகாரையின் விகாரை அதிபரான பேராசிரியர் மகிந்த சங்கரக்கித தேரரை நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். அங்கு, மாண்புமிகு மகா சங்கரத்னா அவர்கள் நாட்டுக்காக உயிரிழந்து அங்கவீனமடைந்த வீரமிக்க கடற்படை வீரர்களுக்காகவும், தற்போது பணியாற்றி ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்த கடற்படையினருக்காகவும் பிரார்த்தனை செய்தார்.
கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, கடற்படை பௌத்த சங்கத்தின் தலைவரும், சுகாதார சேவைகள் பணிப்பாளருமான டாக்டர். ரியர் அட்மிரல் ஜானக மாரம்பே, கடற்படையின் பணிப்பாளர் நாயகங்கள், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, கடற்படை சேவா வனிதா பிரிவின் நிர்வாக குழுக்கள் கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட உறுப்பினர்கள், கொடி அதிகாரிகள், மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.