வடக்கு மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கடற்படைத் தளபதியை சந்தித்தார்
வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களை 2024 டிசம்பர் 07 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இதன்படி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், கடற்படையால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமூகப் பணித் திட்டங்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் சுமுகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் தொண்டர் கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க மற்றும் கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் அடையாளமாக கடற்படைத் தளபதியினால் கௌரவ வடமாகாண ஆளுநருக்கு நினைவுப் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.