இலங்கை கடற்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திருகோணமலையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது

கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சியொன்று 2024 டிசம்பர் 05 ஆம் திகதி திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

2024 டிசம்பர் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 74 ஆவது ஆண்டு நிறைவை சமூக சேவை மற்றும் மத நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து பெருமையுடன் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை கடற்படை தயார் செய்துள்ளது.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில், பிரதி கடற்படைத் தலைமை அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான நிகழ்ச்சி திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

மேலும், கிழக்கு கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த இருநூற்றி எண்பத்து நான்கு (284) கடற்படை வீரர்கள் இந்த மாபெரும் சமூக நிகழ்வை வெற்றியடையச் செய்ய முன்வந்து பங்களித்தனர்.