கடற்படை மூலம் பல் சிகிச்சை முகாமொன்று நடத்தப்பட்டது
இலங்கை கடற்படை பல் மருத்துவ சேவை, கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் Good Neighbours Foundation (Guarantee) Limited நிருவனம் இணைந்து கடற்படை சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட பல் சிகிச்சை முகாமின் இரண்டாவது கட்டம் மாத்தரை, தலஹிடியாகொட மற்றும் தேவாலேகம பகுதிகளில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவாவின் தலைமையில் 2024 டிசம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.
வாய்வழி சுகாதாரம், நோய் தடுப்பு பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுகள் மற்றும் குறைந்த வசதிகள் கொண்ட சமூகத்திற்கு தரமான பல் ஆணாதிக்கத்தை வழங்கும் நோக்கத்துடன் தெற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த பல பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டங்கள் துணை இயக்குநர் கடற்படை பல் மருத்துவ சேவைகள், மருத்துவ கெப்டன் (பல்) இந்திரா தர்மப்ரிய மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் கட்டளை மருத்துவ அதிகாரி மருத்துவ கொமான்டர் (பல்) கனீஷ்க முதலிகே ஆகியோரின் பங்களிப்பில் மாத்தரை தலஹிடியாகொட பராக்கிரம கல்லுரி மற்றும் தேவாலேகம ஶ்ரீ அத்ததஸ்ஸாராமய விஹாரயவில் இடம்பெற்றது.
மேலும், குறித்த பகுதியில் பாடசாலை மானவர்கள் மற்றும் துறவிகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த பல் சிகிச்சை முகாமில் பல் சிகிச்சை பெற்றனர்