கடற்படை சமூக நலத் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 04 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன
ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு மற்றும் கடற்படை சமூக நலத் திட்டத்தினால் நிர்மானிக்கப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் நிறுவும் விசேட திட்டத்தின் கீழ், கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவில் ஜனசிரிகம கிராமம், ஹிகுருவெவகம கிராமம் , 21 கொலனியில் மேற்கு தக்க்ஷிலா கல்லுரி மற்றும் மஹகஸ்வெவ கல்லுரி ஆகியவற்றில் நிறுவப்பட்ட நான்கு (04) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 டிசம்பர் 04 ஆம் திகதி பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன்படி, இந்த விசேட திட்டத்தின் கீழ் இது வரை 07 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், மேலும் 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, கல்னாவ, தம்புத்தேகம, கெக்கிராவ, தலாவ, கஹட்டகஸ்திகிலிய, நொச்சியாகம, ஹொரோவ்பதான மற்றும் திரப்பனை ஆகிய பிரதேச செயலகங்களில் நிறுவப்படவுள்ளன