கடற்படை மூலம் பல் சிகிச்சை முகாமொன்று நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை பல் மருத்துவ சேவை, கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் Good Neighbours Foundation (Guarantee) Limited நிருவனம் இணைந்து கடற்படை சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்படுகின்ற பல் சிகிச்சை முகாமின் முதல் கட்டம் 2024 நவம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் கருவலகஸ்வெவ மற்றும் ரொட்டவெவ பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, கடற்படை பல் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கொமடோர் நந்தனி விஜேதோருவின் மேற்பார்வையின் கீழ், வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட பல பகுதிகளை உள்ளடக்கி கருவலகஸ்வெவ திரையரங்கத்தில் மற்றும் ரொட்டவெவ திமுத்து ஆரம்ப குழந்தை பருவ மேம்பாட்டு மையத்தில் இந்த நடமாடும் பல் மருத்துவ மனை ஏற்பாடு செய்யப்பட்டது. பாடசாலை குழந்தைகள் உட்பட 291 நபர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பல் சிகிச்சை பெற்றனர்.