74 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இந்து மத நிகழ்ச்சி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது

2024 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் மத நிகழ்ச்சிகளின் இந்து மத நிகழ்ச்சி இன்று (2024 டிசம்பர் 02) கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் இந்து ஆலயத்தில் இடம்பெற்றது.

இலங்கை கடற்படையின் பெருமைக்குரிய 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் பல சமய நிகழ்வுகள் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சமய நிகழ்ச்சிகள் தொடரின் ஆரம்பமாக, கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வு ருவன்வெலி மஹா சேய அருகில் மற்றும் ஜய ஸ்ரீ மஹா போதி அருகில் நடைபெற்றதுடன், கிறிஸ்துவ சமய வழிபாடுகள் கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்திலும், இஸ்லாமிய சமய நிகழ்ச்சி கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலிலும் இடம்பெற்றது.

அதன்படி, பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தனவின் தலைமையில், கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் 2023 டிசம்பர் 02 ஆம் திகதி மதகுரு நஜேந்திரன் சர்மா சுரேந்திரன் அவர்களினால் இந்து சமய வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன் இங்கு நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த, அங்கவீனமாகிய மற்றும் தற்போது சேவையாற்றும் கடற்படை வீரர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினர்களுக்காகவும், அனைத்து கடற்படையினருக்கும் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

இந்த இந்து சமய நிகழ்ச்சியில், மேற்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி மற்றும் கடற்படை கட்டளை அதிகாரி (வெலிசர), கொமடோர் புத்திக ஜயவீர, ஒருங்கிணைக்கப்பட்ட வழங்கல் மற்றும் சேவைகள் முகாமைத்துவ அமைப்பின் பணிப்பாளர் மற்றும் கடற்படை வரவு செலவுத் திட்டத்தின் பணிப்பாளர் கொமடோர் துலித தேவப்பிரிய, இலங்கை கடற்படைக் கப்பல் ரங்கல நிருவனத்தின் கட்டளை அதிகாரி கப்டன் நீலங்க தர்மரத்ன உட்பட கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.