இலங்கை தொண்டர் கடற்படையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க பதவியேற்றார்
மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய, ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க இலங்கை தொண்டர் கடற்படையின் தளபதியாக இன்று (2024 நவம்பர் 15,) தொண்டர் கடற்படைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
கடற்படை மரபுப்படி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை தொண்டர் கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்றதன் பின்னர், தொண்டர் கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண, கடற்படைத் தலைமையகத்தில் வைத்து தொண்டர் கடற்படையின் புதிய தளபதியிடம் அப்பதவியின் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
மேலும், தொண்டர் கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளினால் பாராட்டப்பட்ட பின்னர், ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண கடற்படை மரபுப்படி தொண்டர் கடற்படைத் தலைமையகத்திலிருந்து பிரியாவிடை பெற்றார்.
மேலும், ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க மேற்கு கடற்படை கட்டளை மற்றும் இலங்கை தொண்டர் கடற்படையின் தளபதியாகவும் தொடர்ந்து பணியாற்றுவார்.