இந்திய கடற்படையின் ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 நவம்பர் 10 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 நவம்பர் 10) இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளதுடன், இலங்கை கடற்படையினர் குறித்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படையின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கினர்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் கபில் குமார் (Kapil Kumar) மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

மேலும், இலங்கை கடற்படை வீரர்கள் மற்றும் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பயிற்சி அதிகாரிகள் ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பலைப் பார்வையிடவும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வாய்ப்பைப் பெற்றனர். குறித்த நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியிலும், தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிடும் சுற்றுப்பயணங்களிலும் நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படையினர் கழந்துகொண்டனர்.

மேலும், பிராந்திய கடற்படையினரின் இத்தகைய நட்புரீதியான விஜயங்கள், எதிர்காலத்தில் கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை கூட்டாக சமாளிக்க தோழமை மற்றும் ஒத்துழைப்பில் பெரும் முன்னேற்றத்தை கொண்டு வரும்.