இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் திரு. Andalib Elias அவர்கள் இன்று (2024 நவம்பர் 12) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

இதன்படி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், கடற்படைத் தளபதி மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சுமூகமான சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், இதனை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Commodore M Moniruzzaman ஆகியோரும் கலந்துகொண்டனர்.