இந்திய கடற்படையின் ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 நவம்பர் 10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இவ்வாறாக கொழும்பு துறைமுகத்திற்கு வந்த ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் 67.5 மீட்டர் நீளமும் 53 கடற்படையினரையும் கொண்டுள்ளதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் கபில் குமார் (Kapil Kumar) பணியாற்றிகிரார்.

‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். நீர்மூழ்கிக் கப்பலின் செயற்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இலங்கை கடற்படை வீரர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படையினர் தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் 2024 நவம்பர் 13 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட உள்ளது.