கடற்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினரின் நட்புறவு சந்திப்பு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், கடற்படையினர் சமய மற்றும் கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர், மேலும் அந்த நிகழ்ச்சித் தொடரில் கடற்படையினரின் நட்புறவு சந்திப்பு இன்று (2024 நவம்பர் 09,) வெலிசர கடற்படை வளாகத்தில் அமைந்துள்ள Wave N’ Lake கடற்படை அரங்கில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
கடற்படையின் பெருமைமிக்க 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நட்புறவுச் சந்திப்பு, கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் அனைத்து கடற்படைக் கட்டளைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சேவையாற்றும் சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகள் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட கடற்படையினருக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் சுமூகமான சந்திப்பில் தனது கடற்படை வாழ்க்கை மற்றும் ஓய்வு பெற்ற வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி, ஓய்வுபெற்ற மூத்த மாலுமிகள் சார்பில் கடற்படை கட்டுப்பாட்டாளர் தலைமை சிரு அதிகாரி டி.ஜி.நீல்கரூ (ஓய்வு) மற்றும் கடற்படை வீராங்கனை டி.எம்.எஸ்.யு. பண்டார (ஓய்வு) ஆகியோர் உரையாற்றியதுடன் கடற்படை கட்டுப்பாட்டாளர் தலைமை சிரு அதிகாரி டபிள்யூ.எம்.ஜி.ஏ.குமார தனது அனுபவத்தை மாலுமிகளுக்கு தெரிவித்தார்.
கடற்படை நலன்புரி திணைக்களம் மூலம் கடற்படை வீரர் பிஎச்எச்ஜிபி புஷ்பகுமாரவிற்கு சக்கர நாற்காலியொன்று வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் நடைபெற்ற பின்னர், மாலுமிகளின் நட்புறவு கூட்டத்தில் கடற்படை தளபதி உரையாற்றினார். அங்கு உரையாற்றிய கடற்படைத் தளபதி, 74 வருட கால கடற்படையின் நீண்ட பயணத்தில் பல்வேறு காலகட்டங்களில் மாலுமிகளின் தொழில்சார் பங்களிப்பு தற்போதைய கடற்படையின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவித்தார். நாட்டின் கடல்சார் லட்சியத்தை அடைவதற்கு, கடற்படையின் தனித்துவமான, இராணுவ, இராஜதந்திர மற்றும் சட்ட அமலாக்கப் பாத்திரங்களை 74 ஆண்டுகளாக முன்னெடுத்துச் செல்வது அனைவரின் பொறுப்பாகும் என கடற்படைத் தளபதி மேலும் தெரிவித்தார் , கூட்டு உணர்வோடு, பரந்த கடல் முதல் சர்வதேச கடல் வரை ஒரு பிராந்தியத்தில் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்புப் பொறுப்பை நிறைவேற்ற அனைத்து மாலுமிகளின் அர்ப்பணிப்பு அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள தனித்துவமான பணியை திறம்பட நிறைவேற்ற, அதிகாரிகள், மூத்த மாலுமிகள் மற்றும் இளைய மாலுமிகளுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பு தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும் இது மூலம் கடற்படை வீரர்களின் பிரச்சினைகளை வெளி தரப்பினரால் பாதிக்காமல் கூட்டாக தீர்க்க வேண்டும் என்றும் எந்தவொரு சவாலான காலகட்டத்திலும் கடற்படை தனது கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
கடற்படை கலாசார இசைக்குழு மற்றும் நடனத் திணைக்களத்தின் பாடல், இசை, நடனம் ஆகிய அம்சங்களுடன் வண்ணமயமாக அமைந்த இந்த நட்புறவுச் சந்திப்பில் கலந்துகொண்ட கடற்படைத் தளபதி, கடற்படைத் தலைமை அதிகாரி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் அனைவருக்கும் கடற்படை தினத்தன்று கடற்படை பாரம்பரியத்தில் ஒன்றாக வழங்கப்படும் பாரம்பரிய படாகானா உணவு வழங்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வுக்காக கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட உட்பட கடற்படை முகாமைத்துவ சபையின் சிரேஷ்ட அதிகாரிகள். கடற்படைத் துனை தலைமை அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, உள்ளிட்ட கட்டளைத் தளபதிகள், கொடி அதிகாரிகள், மூத்த மற்றும் இளநிலை அதிகாரிகள், ஓய்வு பெற்ற சிரேஷ்ட மாலுமிகள், பணியாற்றும் சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகள், பெண் மாலுமிகள் கலந்து கொண்டனர்.