இலங்கை கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கை கடலோரக் காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட, ரியர் அட்மிரல் ராஜப்பிரிய சேரசிங்க இன்று (2024 நவம்பர் 05) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் எட்டாவது (08) பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் ராஜப்பிரிய சேரசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர், கடற்படைத் தளபதியுடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்புடன், கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகத்தின் புதிய பணிகளுக்காக கடற்படைத் தளபதி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுகூரும் வகையில் கடற்படை தளபதி மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் நினைவு பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.