இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவர் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவர் கௌரவ Semih Lütfü Turgut அவர்கள் இன்று (2024 நவம்பர் 07) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கடற்படைத் தளபதி மற்றும் இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.