'விருசிசு பிரதீப' புலமைப்பரிசுகள் வழங்கும் நிகழ்வு கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது
தேசிய பாதுகாப்பு நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'விருசிசு பிரதீப' புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், 'விருசிசு பிரதீப' புலமைப்பரிசில்களை அடையாளமாக வழங்கும் நிகழ்வு கடற்படைத் தலைமையகத்தில் இன்று (2024 நவம்பர் 07) பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரணவின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்படி, 2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 12 மாணவர்கள் 'விருசிசு பிரதீப' புலமைப்பரிசில்களுக்கு தகுதி பெற்றுள்ளதுடன், யுத்தத்தின் போது அங்கவீனமடைந்து ஓய்வுபெற்ற கடற்படை வீரர் டி.எம்.ஏ குணவர்தனவின் மகளுக்கு, 'ரன் கெகுலு' சேமிப்புக் கணக்கு மற்றும் பாடசாலை உபகரணங்கள் அடையாளமாக கடற்படைத் தலைமையகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், ஏனைய 'விருசிசு பிரதிப' புலமைப்பரிசில்களுக்கு தகுதி பெற்ற பிள்ளைகளுக்கு 'ரன் கெகுலு' சிறுவர் சேமிப்புக் கணக்குகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள், எதிர்காலத்தில் கடற்படை கட்டளைகளில் இருந்து குழந்தைகளை அவர்களின் குடியிருப்பு முகவரிக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன