பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கடற்படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா (ஓய்வு) இன்று (2024 நவம்பர் (06) தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு, கடற்படை தளபதியை சந்தித்த பின்னர், கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (Maritime Rescue Coordinating Centre, Colombo - MRCC) தகவல் இணைவு மையம் (Information Fusion Centre - IFC) நடவடிக்கைகளை அவதானித்த பாதுகாப்புச் செயலாளர் கடற்படைத் தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு உரை நிகழ்த்தினார்.
அதன்படி, கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளரை மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க அவர்கள் அன்புடன் வரவேற்றார். இராணுவ மரபுகளுக்கு அமைவாக பாதுகாப்புச் செயலாளருக்கு விசேட மரியாதை செலுத்திய பின்னர் கடற்படைப் பிரதானி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, கடற்படைத் தலைமை அதிகாரி உட்பட கடற்படை முகாமைத்துவ சபையை பாதுகாப்புச் செயலாளருக்கு அறிமுகப்படுத்தினார்.
எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா (ஓய்வு) பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கடற்படைத் தலைமையகத்திற்கு ஆய்வு மேற்கொண்ட முதல் தடவையாக இந்த விஜயம் அமைந்ததுடன், இந்த விஜயத்தின் போது கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சுமூகமான சந்திப்பின் பின்னர் இரு தரப்புக்கும் இடையில் நினைவு பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
கடற்படையின் நிறுவன கட்டமைப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளரிடம் விளக்கமளித்த பின்னர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மற்றும் கடற்படை தலைமையகத்தில் உள்ள தகவல் இணைவு மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை பாதுகாப்பு செயலாளர் அவதானித்தார்.
மேலும், இந்த விஜயத்தின் போது கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க கேட்போர் கூடத்தில் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், கடல் வலயத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் ஒடுக்கும் வகையில் பரந்த கடல் பகுதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலையான கடல் பிராந்தியத்தை பராமரிப்பதில் இலங்கை கடற்படையின் பங்கிற்காக பாராட்டப்பட்டது. மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், தீவு நாடான இலங்கைக்கு சமுத்திரத்தினால் ஏற்படும் அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக முறியடித்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை கடற்படையின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, கடற்படை முகாமைத்துவ சபை, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, கொடி அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் குழுவும் கலந்துகொண்டன.