இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரம் புனித பூமியில் கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வுகள் நடைபெற்றது

2024 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் கடற்படை பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வு 2024 நவம்பர் 02 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி மாலா லமாஹேவாவும் கலந்து கொண்டார்.

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசிர்வாதம் வழங்கும் வகையில் சமய நிகழ்ச்சிகளை கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.

அதன் படி இந் நிகழ்வின் பௌத்த சமய வழிபாடுகளை ஆரம்பிக்கும் வகையில் கடற்படைத் தளபதி 2024 நவம்பர் 02 ஆம் திகதி காலை அடமஸ்தானாதிபதி நுவரக் களவியே பிரதம சங்கநாயக்க வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற பின் கடற்படைக் கொடிகள் வண்ணமயமான ஊர்வலத்துடன் கொண்டு வரப்பட்டு புனித ஜெயஸ்ரீ மஹா போதி அருகில் வைக்கப்பட்டது. அதன் பின் கடற்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் அதமஸ்தானாதிபதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் தலைமையில் கடற்படைக் கொடிகளை ஆசீர்வதித்து, கடற்படையின் எழுபத்து நாங்கு வருட நீண்ட வரலாற்றில், தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த, காணாமல் போன மற்றும் அங்கவீனமடைந்த மாலுமிகள் அனைவருக்கும் அஞ்சலி மற்றும் ஆசீர்வாதங்களைச் செலுத்தப்பட்டதுடன் நாடு, தேசம் மற்றும் சம்மா சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்க இலங்கை கடற்படைக்கு பலம், சக்தி மற்றும் தைரியம் வாழ்த்தியதுடன், கடற்படைத் தளபதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட அனைத்து கடற்படை வீரர்களின் எதிர்கால வெற்றிக்காக ஆசீர்வதிக்கப்பட்டது.

2024 நவம்பர் 02, அன்று மாலை, கடற்படை பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கஞ்சுக பூஜை பிங்கம, ருவன்வெலி மஹா சேய அருகில் பௌத்த மத நடைமுறைகளைத் தொடர்ந்து நடைபெற்றது. அங்கு 300 மீற்றர் நீள பௌத்தக் கொடியை கடற்படைத் தளபதி தலைமையிலான சிரேஷ்ட அதிகாரிகளால் ருவான்வெளி மகா ச கர்பாவைச் சுற்றி எடுத்துச் செல்லப்பட்டதுடன் கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

இந்த சமய நிகழ்ச்சிக்காக கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, கடற்படையின் பிரதி தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், கடற்படை பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி ரியர் அட்மிரல் ஜானக மாரம்பே மற்றும் கடற்படை பணிப்பாளர் நாயகங்கள், வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார உட்பட கட்டளை தளபதிகள் கடற்படை சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள், கொடி அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகளும் கலந்து கொண்டனர்.